“அம்மா
பால்! பால் பால்!” என்ற ஓசை கேட்பதற்கு ஒரு வினாடி முன்பே ஒலிக்கும் பால் வண்டிக்காரனால்
எழுப்பப்படும் மணியோசை அதிகாலை நேர நிசப்தத்தை உடைத்து. முன்பெல்லாம் அனைத்து வீடுகளுக்கும்
பால் விநியோகம் செய்து வந்த பால்காரன் தற்போது அத்தெருவில் இரண்டொரு வீடுகளுக்கு
மட்டுமே அமுதளிக்கிறான். அச்சத்தம் கேட்டு பாத்திரங்களுடன் வீட்டு வாசலைத் திரக்கும்
போது மிரண்டு கனவு கலைந்து வெடுக்கென்று மான் துள்ளி குடித்தோடுவதுபோல தெறித்தோடியது
அவ்வீட்டு வாசல் முன் படுத்திருந்த தெரு நாய் . இவ்வழி பாயும் சாலையின் மீது மித வேகத்தில்
ஓர் மிதிவண்டியின் சக்கரங்கள் நர நரவென உராயிந்து கொண்டிருக்கும் சப்தமும் அவ்வமைதியில்
கேட்டது. இவற்றையெல்லாம் விட மிதிவண்டியில் பயணம் செய்யும் இலக்கியனுக்கு விமானம் தரையிரங்குவது போல அவன் அதிவேகமாக இழுத்துவிடும்
மூச்சுக்காற்றின் போக்குவரத்துச் சத்தம் அவனுக்கு மட்டுமே கேட்டது.
மிதிவண்டியோடு சேர்த்து அவன் உடலை விட அவன் உள்ளம் அழகாகவும் ஆழமாகவும்
தன்னைச் சூழ்ந்துள்ள அதிகாலை இயற்கையின் மீது பயணித்துக்கொண்டிருந்தது. இயற்கைத் தாயின்
மடியில் படுத்துறங்குவது போல உணர்ந்தான். உள்ளமோ இயற்கையின் மீது தன்னை காதல் கொள்ள
வைத்த அந்த அற்புத காந்தம் எதுவாக யிருக்கும்
என வியந்து தேடிக்கொண்டிருந்த போது அப்பால்காரனின் ஒலி கவனத்தை திருப்பியது. மனதில்
சிதறி ஓடும் கவிதைகளை எண்ண வலைகளால் பிடிக்கமுனைறான். தொலைபேசி,தொலைக்காட்சியோலிகளைக்
கேட்டு அலுத்துப்போன அவன் காதுகளில் தேனினும் இனிமையாக பறவையின் இசை ஒலி தித்தித்தது.
அண்ணாந்து பறந்த வானத்தில் நீந்தும் பறவையின் மீது தன் தேடல் வலையை பாய்ச்சுகிறான்.
பறவையின் மீது மோதைருந்த அவன் பார்வைக்குபதிலாக எதன் மீதோ மோதியது அவன் மிதிவண்டி. அதனால் சுய நினைவுக்குள்
இழுக்கப்பட்ட இலக்கியன் யாரோ தன் வண்டியைப் பிடித்து நிறுத்தியிருப்பதை அறிந்தான்.
காலைக் காட்சிகளைக் கண்டு பனியினும் குளிர்ந்திருந்த அவன் கண்களுக்குள் மேலும் சில
பனிக்கட்டிகள் போட்டாற்போல குளிர்ந்து நிறைந்தன. தன்னுடன் பள்ளியில் பயின்ற நண்பனா
அவன்? அவனே தான்! தான் செய்த சேட்டைகளை ஆதரித்து துணை நின்று, தன்னுடன் சோற்றையும்,
அன்பையும் பகிர்ந்த ஆகாஷே தான் தன் மிதிவண்டியை மறித்து தன்னைப் பார்த்து புன்னகை புரிகிறான்
என்பதை உணர்ந்த மறுகணம் தன் வாயை புன்னகையால் அடைத்துக்கொண்டு ஆகாஷை நெஞ்சோடு அனைத்துக்கொண்டான்.
நீண்ட நட்களுக்கு பிறகு சந்திக்கும்
நண்பனைக் கண்டதும் உதையமாகும் களிப்புக்குத்தான் அனை போட முடியுமா என்ன? சுனாமியை போல
பன்மடங்கு ஆற்றல் அதிகம் கொண்ட நினைவலைகளால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வார்கள். கடவுளை
பார்த்தால் கூட அவ்வளவு ஆனந்தம் ஏற்படுமா என்பது சந்தேகம் தான். இருவரும் பொடி நடையாக
நடக்கத் தொடங்கினர். சில காலம் கழித்து சந்தித்த அவ்விரு இளைஞர்களுக்கிடையே பேச சிக்கிக்கொள்ளாத
வார்த்தைகளே இல்லை. தனக்குத் தெரிந்த வார்த்தைகள் அனைத்தையும் உபயோகித்துத் தான் அனுபவித்த
சம்பவங்களை மூளையின் முற்றத்தில் கடுகளவேனும் ஒட்டிக்கொள்ள இடங்கொக்காமல் வளித்து வடித்துக்
கொட்டினர். இடையிடையே சிரித்து பல யுகங்கள் ஆனது போல என்று பலர் வியக்கும் வண்ணம் குபீரென்றும்
எலிகத்தும் ஓசையிலும் வயிறுலிருந்து குடல் குலுங்கிக் குலுங்கிக் வெளியேறுமாறு சிரித்தனர்.
சில்லறைப்
போல் சிதறும் சிரிப்புடன் வெகு நேரம் பேசிக்
கொண்டே நடந்து வந்த தோழர்கள் ஓர் சிறிய பெட்டிக்கடையடைத்தனர். பாரம்பரியமாக பின்தொடரும்
சம்பிரதாயம் போல் சில ஆண்கள் கடைக்கு முன் பெஞ்சில் அமர்ந்து டீயுடனும் பீடியுடனும்
செய்தித்தாளையும் ருசித்துக்கொண்டிருந்தனர். இருவரும் டீ வாங்கிக்கொண்டு பெஞ்சில் அமர்ந்தனர்
.”ஜல்லிக்கட்டுக்கு இவ்வருடமும் தடைவிதிக்கப்படுமா?” என்று எதிரில் அமர்ந்திருந்த ஆண்களில்
ஒருவர் செய்தித் தாளைப் பார்த்துக் கொண்டே உரக்கக்கூவினார்.
அவ்வாறு அவர் கூவியதும் டீயை ஊதிக்கொண்டிருந்த
ஆகாஷ், “ எதுக்கு டா இந்த ஜல்லிக்கட்டெல்லாம்”, என்றான்.
“அது
ஜல்லிக்கட்டு இல்ல மச்சி ,அதோட உண்மையான பேரு
ஏறுதழுவுதல். ‘ஏறு’ன்னா காளை, அத கட்டித்தழுவுறது
ஏறுதழுவுதல். காளையோட கொம்புல சல்லிக்காசு கட்டி வெச்சிருப்பாங்க எறுத கட்டித் தழுவுற
வீரனுக்கு அந்த சல்லி, அதைத்தான் நம்ம ஜல்லிக்கட்டுன்னு சொல்றோம்” என்று விளக்கினான்
இலக்கியன்.
“வாயில்லா
ஜீவன் இப்படி அவங்க வீர சாகசத்தக் காட்ட கொடுமப்படுத்தறது தப்பு”.
“என்ன
தப்பு? கேரளாவுல யானையும், ஐதரபாத்ல குதிரையும் , ராஜஸ்தான்ல ஒட்டகத்தையும்,துன்புருத்துராங்கன்னு
சொல்லிட முடியுமா? ஏன், மிலிட்டரில குதிரை மேல ஏறி சண்டைபோடலையா, கடும் பயிற்சி இல்லாம
அதுங்க தாக்கு பிடிக்குமா? போலீஸ் மோப்ப நாயா கொடுமபடுத்தறோம்னு ஏன் போராட்டம் பண்ணல?
இதுங்களோட சாணத்துல உரம் இல்ல, பால்ல பணம்
இல்ல.”
"நா பீட்டால உறுப்பினரா
இருக்கேன். நம் நாட்டுமாடுங்க கஷ்டப்படக்கூடாதுனு அமெரிக்க நாட்டு அமைப்பு வலியுறுத்துது.
நமக்கு எங்க போச்சு புத்தி?".
அதுவரை சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த
இலக்கியனின் புருவங்கள் நெரிந்து ஒன்றோடொன்று இணைத்தன. தன் அன்பு சிநேகிதனை கடிந்துகொள்ளவும் தனக்கு உரிமையுள்ளது
என்று நினைத்துக்கொண்டான். "என்னடா பெரிய பீட்டா? மாடு நம்ம குடும்பத்துல ஒன்னு.
நமக்கும் மாட்டுக்கும் நடுவுல அவன் யாருடா அமெரிக்கா புதுசா மொளச்சவன். நம்ம மாட்டுமேல
நமக்கில்லாத அக்கறை அவனுக்கெதுக்கு? இதுல இருக்கற நுட்பத்தை நாம கூர்ந்து கவனிக்கணும்.
உலகத்துல வேற எந்த நாட்லயும் நம்ம மாட்ட மாதிரி நாட்டுமாடு இல்ல. நல்ல யோசி, பால்ல
மட்டும் தான் நாம வெளிநாட்டு பொருளை வாங்கல.
நம்ம ஊர்ல நம்ம சாப்பிட மிச்சத்த சாப்டுட்டு விசுவாசமா நாட்டுநாயிங்க சுத்திட்டு இருந்துச்சு.
அத ஒழிச்சு ஜெர்மன்ஷெப்பர்ட், டாபர்மேன், பொமரேனியன்னு கொண்டுவந்தானுங்க. அந்த நாட்டு
நாயிங்க சாப்பட்றது வெளிநாட்டு உணவுங்கற business இருக்கு. கடைசியில நம்ம நாய தெருநாயாகிட்டானுங்க.
இதே மாதிரி பசுமைப்புரட்சிங்க பேர்ல பண்டைய விவசாய முறைகளை ஒழிச்சு வெளிநாட்டு டிராக்டர்,
பெர்டிலிஸிர் கொண்டுவந்து நாசமாக்கினானுங்க. வேப்பங்குச்சி கருவேலங்குச்சி உப்பு போட்டு
பல்லு வெளக்கிட்டிருந்த நம்மக்கிட்டருந்து அதயெல்லாம் புடிங்கிட்டு டூத்பேஸ்ட் குடுப்பானுங்க,
கொஞ்ச நாள் கழிச்சு 'உங்க டூத்பேஸ்ட்-ல உப்பும் வேம்பும் இருக்கானு நம்பகிட்டயே கேப்பான்.
மானங்கெட்டவனுங்க. வளர்ந்த தேசமா இருந்த நம்ம இந்தியாவ வளரும் தேசமா மாத்தி லாபம் சம்பாதிப்பவன்.
அப்பேற்பட்ட அமெரிக்கானுக்கென்ன நம்ம குலதெய்வமான மாட்டுமேல அக்கறை?".
மேலும்
ஆகாஷ் யோசிக்கும்போது, "பிங்க் ரெவொலுஷங்கர பேர்ல இந்தியமாடுகளை அளிக்க முடிவு
செய்த்துள்ளதுள்ளன வெளிநாடுகள். 1970ல இந்தியாவில் உள்ள நாட்டு மாடுகளின் எண்ணிக்கை
ஏழுகோடி. இப்போ வெறும் ஏழாயிரம். காரணம், வெளிநாட்டான் கொண்டுவந்த ஜெர்சி மாடு. அம்மாட்டின்
சாணமோ உரமாவதில்லை, கறியோ உணவாவதில்லை,பாலோ இந்தியாவில் சர்க்கரை நோய், இளமைபூப்பு,
செரிமானமின்மை போன்ற நோய்களை பரப்புகின்றன. நோய்கள் நமக்கு, அவற்றின் மருந்து
36000 கோடி பெருவர்த்தகத்தின் லாபம் வெளிநாட்டானுக்கு. மேலும் உலகில் மாட்டுக்கறி உண்ணாத
நாடே கிடையாது. அவர்கள் சாப்பிட நம் மாடுகள் வருடத்திற்கு 24 லட்சம் டன் வியாபாரமாகிறது.
அது அநியாயமில்ல? மிச்சமுள்ள மாடுகள் இருக்கக்காரணம் காளைகள். அவையும் ஜல்லிக்கட்டுக்காக
வளர்க்கப்படுபவை. அவற்றை அழித்தல் செயற்கை கருத்தரிப்பு செய்ய நேரிடும். அதற்கும் நாம்
அவனிடம் கையேந்த வேண்டும்", என்றான்.
"நீ சொல்றது சரியாவே இருந்தாலும் குலதெய்வமா வாங்கற மாட்ட வெச்சு குரூர
விளையாட்டு விளையாடுவது காட்டுமிராண்டித்தனம், படிப்பறிவற்ற்றவர்களின் விளையாட்டு".
"சகமனுஷன கொலைவெறியோட தாக்கறதும் அத சுத்திஉக்காந்து
லட்சம் பேர் கைதட்டறாங்களே, அதான் 'பாக்ஸிங்', அது வீரவிளையாட்டு, தமிழன் காலகாலமா
ஏறுதழுவுனா அது கொடூரமா? தொலைச்சிருவேன்!", என்று உறுமினான் இலக்கியன். மேலும்,
" ஏறு தழுவுதல் னா மாட்ட கொன்னு அடக்குறதில்ல. சில தூரம் மாட்டோட ஆவேசத்தை அடக்குவது.
அதுல ஜெயித்த காளை நல்ல ஆரோக்கியமான பால் தரும் மாட்டை கறுவிக்கும் ஆற்றல் பெரும்.
மேலும் பலம் பெரும். தோல்வி பெற்ற மாட்ட விவசாயத்துக்கு பயன்படுத்துவாங்க. உலகத்துல
வேற எந்த நாட்லயும் மாட்ட மதிக்காதப்பவே மாட்டுக்கு பொங்கல் வெச்சு தொழுதவங்க நாம்ம.
சிவனுக்கு வானளவுல கோயில் கட்டின அருள்மொழிசோழன் சிவனுக்கு முன்னாடி நந்தியை வணங்கும்படி
வெச்சான். யாரப்பாத்து படிப்பறிவற்றவங்கற? உலகுக்கே படிப்பறிவு, பண்பாடு, வேளாண்மை,
அறிவியல், நாகரிகம் சொல்லிகுடுத்தவங்க நாம. நேத்து பேஞ்ச மழைல மொளச்ச அமெரிக்கன் தன்
மொழி தெரியாதவன் அநாகரீகமானவன்பான், நாம 'யாதும் ஊரே யாவருங்களீர்'னு இருந்தது தப்பாபோச்சுல்ல.
தமிழ் மரபை விடுறதும் மானத்தை விடுவதும் ஒண்ணுனு சொல்லி 'தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து
நில்லடா!' டேய்", என்று வீரவசனம் பொழிந்தான்.
இவற்றைக்கேட்டு
பிரமித்து நின்ற ஆகாஷ், "தமிழன்டா!" என்று தன் நெஞ்சிலிருந்து உறுமியபோது
ஒளிர்ந்த அவன் கண்கள் தெளிவை வெளிப்படுத்தின.
![]() |
GUYS! PLEASE DO SUPPORT YERU THAZHUVUDAL. IT'S NOT ONLY OUR PRIDE BUT ALSO OUR DUTY TO CONSERVE OUR TRADITION & NATION.
#Jaye