Oct 2, 2017

சாமுராய்


அவள் கண்கள் மாறும் பல வண்ணங்களைப் பிரதிபலித்தனமனம் எதிலோ சிக்கத் திணறி கசந்து போயிருந்ததுபரபரப்பு அவள் கண் இமைகளை இழுத்துக் கட்டி பார்வையைக் கூர்மைப் படுத்தியதுஇதே பரபரப்பு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவின் போதும் இருந்ததுகூலித் தொழிலாளியின் மகளான இவள் காலை கோயிலுக்குச் சென்று, இறைவனையும் இறந்த அன்னையையும் வேண்டி, தந்தையுடன் வலைதள மையத்தில் தேர்வு முடிவுகள் பார்க்க வந்த மாணவர்கள் மொய்க்க, அதனுள் ஊடுருவிப் புகுந்த போதும் கூட்டத்தின் நெருக்கம் மனக்கவலையை நொறுக்கவில்லைவியர்வையை மட்டுமே சட்டையாகக் கொண்ட தந்தை, தன் மகள் வெள்ளைச்சட்டை அணிய விரும்பவதை உணர்ந்திருந்தார்தகுந்த மருத்துவ சிகிச்சையின்றி நின்ற தாயின் இதயம், தான் மருத்துவராக வேண்டும் என்ற வேகத்துடன் இவளிடம் துடித்ததுஅத்துடிப்பு ஆர்வக்கனலை மூட்டியதன் விளைவாக எரிந்தது வீட்டு லாந்தர் நள்ளிரவிலும் அவள் படிப்பதற்காகஇப்படி சேகரித்த ஆற்றலுடன் தேர்வில் பயிரிட்ட விதை 1178/1200 மதிப்பெண்களாக விருக்ஷமானதுமதிப்பெண்களைக் குவித்து, மனதைக் குளிர வைத்த மகளுக்கு இனிப்பான வார்த்தைகளை மட்டுமே அளிக்க முடிந்தது அந்த தந்தையால்மதிப்பெண்களைக் கொண்டு மருத்துவ இலட்சியத்தை நிறைவேற்றுவதன் மூலம், தன் தாயைப் போன்ற பல பாமர நோயாளிகளுக்குத் தாயாய் நின்று சேவை  புரியலாம் என நினைவாலே மருத்துவரானாள்

                  ‘வளர்ச்சித் திட்டங்கள்எனப் பெயரிட்டுக் கொளுத்தப்படும் நல்லிரவுத் தொடர் வெடிகுண்டுகளின் சமீபம்மருத்துவத்தில் சேர NEET எனப்படும்  ‘தேசிய நுழைவுத் தகுதித் தேர்வுகட்டாயம் என அறிவித்தது.   பள்ளிப்புத்தகத்தை மட்டும் மனப்பாடம் செய்தால் படிப்பறிவு பெறலாம் என்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் தான் வாழ்க்கையையே நிர்ணயிக்கிறது என்பன போன்ற தகாத கருத்துக்களை திணித்து, அவள் மனதை குப்பையாக்கின சமூகமும், அதன் அமைப்பின் தோன்றிய பள்ளியும்நம் பாடப்பகுதிகளில் இருப்பது வாழ்க்கைக்குப் போதாதென்றும் பருந்துகளுடன் வாழ கிளி உயர பறக்க வேண்டும் என்றும், தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்ற தன்னம்பிக்கையையும் போதிக்க ஓர் ஆசிரியர் இல்லாது போனது அவள் துர்ப்பாக்கயமே.  நுழைவுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறவில்லைகோழி ருசியேஆனால் பிராமணனுக்கு கோழிக்கறி கொடுத்தால் எப்படி முழுங்குவான், பாவம்.

                 முதலமைச்சருக்கான மருத்துவ கல்லூரிச்சீட்டு ஒதுக்கீட்டில், கட்சிக்காரர்களுக்கும், சாதிக்காரர்களுக்கும் வாய்ப்பு தருவார் என பிற அமைச்சர்கள் எதிர்பார்க்கையில், வெகு சுலபமாக துரிதத்தில் கோப்புகளைப் புரட்டி, தந்தை கையொப்பம் என்ற இடத்தில் கைரேகை பதித்திருந்த விண்ணப்பங்களைத் தேர்ந்தெடுத்த காமராசர் வளர்ந்து ஆட்சி செய்த அதே நாட்டில் தான் நாமும் வாழ்ந்து, வாக்களித்து வருகிறோமா என்ற சந்தேகம் உறுத்துகிறதுநுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவம் படிக்கத் தகுந்தவன் என்றால், மருத்துவம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் தகுதியை குறைத்து மதிப்பிடுவதாகாதாகல்லைச் சிலையாக்குவதற்குத் தானே சிற்பி, சிற்பத்தைக் கோபுரத்தில் வைக்க சிற்பி எதற்குகலைக்கூடம் எதற்கு, சிற்பிக்குக் கூலி தான் எதற்குகல்வி கொடுக்கப்பட்டு ஏற்காமல் போனால் தவறுவாய்ப்பே கொடுக்காமல் ஆற்றலைக் குறைப்பது எந்த வித்த்தில் நியாயம்

               ஒவ்வொரு நாள் இரவுஉணவுக்கும் காலை கூலி சுமக்க வேண்டிய நிலையில் நுழைவுத் தேர்வுக்கான தனிப்பயிற்சிக் கட்டணத்திற்காக மெலிந்தால் கரைந்து மறைந்து விட வேண்டியது தான்.   பழத்தைத் தாங்கும் காம்பு  போல தங்கள் பிள்ளைகளின் கனவுகளைச் சுமந்து, சுரண்டப்பட்டு ஓடும் நடுத்தர பெற்றோர்களுக்கும் இது மெல்ல முடியாத தின்பண்டம் தான்ஆக, இவ்விரண்டு இனத்தவர்களையும் நம்பிப் பிழைக்கும் மேற்த்தட்டு வர்க்கத்தினவர்க்கு மட்டுமே எட்டும் கனியாக மாறியது மருத்துவம்அப்படி இனம், மொழி, உணர்வுகளால் வேறுபட்டவன் எப்படி பாமர மக்களுக்கு இலவச மருத்துவ சேவை புரிவான்மருத்துவன் வணிகனாவான்அப்படிப் பாடத்திட்டத்தைத் தான் மாற்றலாம் என்றால், அதுவும் வீட்டுப் பிரச்சனைகளை மீறி அப்பனிடம் அடியும் உதையும் தாங்கி, தாய்க்கு ஆறுதல் கூறி, சில மைல்கள் கடந்து வகுப்பறை சேரும் மாணவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வத்தைக் குறைக்கலாம்மாறாக, கற்பிக்கும் முறையில் மாற்றம் வேண்டும்;  ஆசிரியர்கள் மதிப்பெண்களை வேட்டையாடச் சொல்லித்தந்து மாணவர்களை விலங்குகளாக்கும் வேடனாய் இல்லாமல் பாடங்களை உணர்ந்து ஊக்கத்துடன் நடைமுறைப் பயன்பாட்டையும், அதன் முக்கியத்துவத்தையும் கடைந்து ஊட்டுபவராய் அமைந்து, வாழ்வின் மீதான அழகான ரசனை, தன்னம்பிக்கை, தேசபக்தி, அன்பு, தோல்வி, வெற்றி இவற்றை உட்புகுத்த வேண்டும். நீட் அவசியமானால் அது நுழைவுக்கல்ல, சிறந்த மருத்துவராக வெளியேறுவதர்க்கு.  

      வாழ்க்கையை கேளிக்கைகளுடன் பொழுதுபோக்காய் சுற்றித் திரியும் மாணவர்களுக்கிடையே, இலட்சியப் பாதையில் நடைபோட்ட போது, தடை வந்தவுடன் துணிவுடன் எதிர்க்கொண்டாள்உயரும் போது உயர்த்தியும், இறங்கும் போது தாழ்த்தியும் பேசும் சமூகத்தில் கண்ட தோல்வியை சகிக்க முடியாமல் அதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய டில்லி சென்றவர்களுடன் அனுப்பி வைத்தார் அன்புத் தந்தைவிசாரணை முடிந்து, அறிவிக்கப்படும் தீர்ப்பு முடிவுகளை அறிய இலவச தொலைக்காட்சி முன் கண்ணிமைக்காது அமர்ந்திருந்தாள்தீர்ப்பு தனக்கு எதிரானது என உணர்ந்த மறுகணம், அவள் கண்கள் தொலைகாட்சியைப் பிரதிபலிக்கவில்லை, மாறாக கனத்து அவள் துயரமும், ஏக்கமும், இயலாமையும் பொங்கி கண்ணீராய் வழிந்த்துதாயின் சேலை நனையும்படி அதை கட்டி அணைத்து கதறிய அழுகையில் ஒன்பது நாட்கள் கரைந்தன.   கையில் அச்சேலையுடன், விரக்தியில் ஊறிய அவள் விழிகள் வீட்டுப்பரண் மீது படிந்து மௌனமாயின
               
                         தன் பல வருடக் கனவின் முதலீடாக தான் உழைத்துப் பெற்ற மதிப்பெண்களுக்குள் மதிப்பில்லை என்றும் அதனால் தான் மருத்துவ சேர்க்கையில் வடிகட்டப்பட்ட கசடானதும் அவள் மனதின் புண்களின் மேல் தீயை எறிந்ததுஅதிலிருந்து எழுந்த புகையை கதகதப்பிற்கு நுகர்ந்தும், அத்தணலால் குளிர் காய்ந்தும் பிழைக்கிறார்கள் பலர்மருத்துவராகாவிட்டால் என்ன, தான் எடுத்துக் கொண்ட செயலை நிறைவேற்றத் தவறினால், தன்வாள் கொண்டே தன்னை மாய்த்துக் கொள்ளும் சாமுராய் ஆனாள்.   மதிப்பெண்கள் பெற்றும் படிக்க இயலாக கல்வித் திட்டம் தனக்குத் தேவை இல்லை என புறக்கணித்து, தன் இறப்பால் புரட்சியை எழுப்பி பகத்சிங்கின் பிள்ளை ஆனாள்

                  தான் எப்போது எப்படி வாழ வேண்டுமென முன்கூட்டியே அட்டவணை போட்டு எங்கு எதற்காக ஓடுகிறோம் என்றே தெரியாமல், அங்குமிங்கும் திரிந்து தன் கூட்டை மறந்து வாழும் இயந்திர வாழ்க்கை ஒரு புறமும், ஆன்மீகவாதிகள், பத்திரிக்கைகள், விளம்பரங்கள், வியாபாரிகள், அரசியல்வாதிகள்தீவிரவாதிகள் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் போலிகள், தங்கள் வாழ்நாள் முழுவதையும் மற்றவர்களின் உழைப்பையும், ஊதியத்தையும் உறிஞ்சி, அடக்கியாளும் தங்களை புத்திசாலிகள் என்று எண்ணிக்கொண்டு, தான் இன்னொருவனிடம் ஏமாறுவதறியாத மூடர்க்கூடத்தைக் கொண்டு கீழ்த்தரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த சமூகம் சர்ச்சைகளை உருவாக்கி, போராட்டக் குமிழிகளை கொதிக்க விட்டு, பலநூறு இந்திய மொழிகளுக்கப்பாற்பட்டுஊடகம் என்னும் இயந்திர மொழியால் மக்களை சலவை செய்து, கிளுகிளுப்பூட்டி, ஆற வைத்து, மீண்டும் இதே சுழற்சியை மேற்கொள்ளும் இயல்போடு இயக்கப்பெற்று வருகிறதுஇவை அனைத்தும், இப்பொழுதும் நடந்தாலும், ஆக்சிஜனோடு சரியோ தவறோ ஒருவிதமான அறிவையும் சுவாசிக்கும் விழிப்புணர்வு தற்போது ஏற்படுவது மாற்றத்திற்கான இடைநிலையாக நம்பப்படுகிறதுஇளம் பிராயத்தில் கோழைத்தனமாக தற்கொலை செய்துகொண்டதாக அவள் குற்றம் சுமத்தப்படுகிறாள். அப்படியானால் தூக்கிலிடப்பட்ட குற்றவாளியின் குற்றதிற்கான காரணத்தை எப்போது எப்படி தூக்கிலிடப்போகிறோம்?!

#Jaye

Aug 23, 2017

மாதொருபாகன் (One Part Woman)


CULTURE THROUGH LITERARY LENS 


This is an endeavor to introduce to people this book, considering the cultural, emotional and conceptual aspects of it. The story line is my second preference. I am personally lured by the background of the novel that sets on farming communital issues, perspective of people, their culture, trends, customs, untold routes and rules laid by and for them which later turns up superstitious.

#Jaye

Jun 2, 2017

Spectacles of Beauty
Picasso in wall of graffiti by kids piss
Iconic wet foot-prints that paws kiss
Magic in its thaw when hot roads chew
Moon multiplied, confined within eyes two
Distinguished darkness in new moon stretched
Classifying each, silhouetting outline sketched
Baffled ballad of dust in sterile light shaft
Stagger, yet prestigious drift- ant’s lurky craft
Moisture in nibble by toothless infant’s nick
Mortification of shadow, on conquer of dark click
Ears on belly tasting bodily algorithm
Heavenly, sound silence as rejuvenating rhythm
Eyes that wear up spectacles of beauty
Sense, in anything and everything, beauty.


#Jaye 

Jan 14, 2017

தமிழன்டா!

            “அம்மா பால்! பால் பால்!” என்ற ஓசை கேட்பதற்கு ஒரு வினாடி முன்பே ஒலிக்கும் பால் வண்டிக்காரனால் எழுப்பப்படும் மணியோசை அதிகாலை நேர நிசப்தத்தை உடைத்து. முன்பெல்லாம் அனைத்து வீடுகளுக்கும் பால் விநியோகம்  செய்து  வந்த பால்காரன் தற்போது அத்தெருவில் இரண்டொரு வீடுகளுக்கு மட்டுமே அமுதளிக்கிறான். அச்சத்தம் கேட்டு பாத்திரங்களுடன் வீட்டு வாசலைத் திரக்கும் போது மிரண்டு கனவு கலைந்து வெடுக்கென்று மான் துள்ளி குடித்தோடுவதுபோல தெறித்தோடியது அவ்வீட்டு வாசல் முன் படுத்திருந்த தெரு நாய் . இவ்வழி பாயும் சாலையின் மீது மித வேகத்தில் ஓர் மிதிவண்டியின் சக்கரங்கள் நர நரவென உராயிந்து கொண்டிருக்கும் சப்தமும் அவ்வமைதியில் கேட்டது. இவற்றையெல்லாம் விட மிதிவண்டியில் பயணம் செய்யும் இலக்கியனுக்கு விமானம்  தரையிரங்குவது போல அவன் அதிவேகமாக இழுத்துவிடும் மூச்சுக்காற்றின் போக்குவரத்துச் சத்தம் அவனுக்கு மட்டுமே கேட்டது.
            மிதிவண்டியோடு சேர்த்து  அவன் உடலை விட அவன் உள்ளம் அழகாகவும் ஆழமாகவும் தன்னைச் சூழ்ந்துள்ள அதிகாலை இயற்கையின் மீது பயணித்துக்கொண்டிருந்தது. இயற்கைத் தாயின் மடியில் படுத்துறங்குவது போல உணர்ந்தான். உள்ளமோ இயற்கையின் மீது தன்னை காதல் கொள்ள வைத்த அந்த அற்புத  காந்தம் எதுவாக யிருக்கும் என வியந்து தேடிக்கொண்டிருந்த போது அப்பால்காரனின் ஒலி கவனத்தை திருப்பியது. மனதில் சிதறி ஓடும் கவிதைகளை எண்ண வலைகளால் பிடிக்கமுனைறான். தொலைபேசி,தொலைக்காட்சியோலிகளைக் கேட்டு அலுத்துப்போன அவன் காதுகளில் தேனினும் இனிமையாக பறவையின் இசை ஒலி தித்தித்தது. அண்ணாந்து பறந்த வானத்தில் நீந்தும் பறவையின் மீது தன் தேடல் வலையை பாய்ச்சுகிறான். பறவையின் மீது மோதைருந்த அவன் பார்வைக்குபதிலாக  எதன் மீதோ மோதியது அவன் மிதிவண்டி. அதனால் சுய நினைவுக்குள் இழுக்கப்பட்ட இலக்கியன் யாரோ தன் வண்டியைப் பிடித்து நிறுத்தியிருப்பதை அறிந்தான். காலைக் காட்சிகளைக் கண்டு பனியினும் குளிர்ந்திருந்த அவன் கண்களுக்குள் மேலும் சில பனிக்கட்டிகள் போட்டாற்போல குளிர்ந்து நிறைந்தன. தன்னுடன் பள்ளியில் பயின்ற நண்பனா அவன்? அவனே தான்! தான் செய்த சேட்டைகளை ஆதரித்து துணை நின்று, தன்னுடன் சோற்றையும், அன்பையும் பகிர்ந்த ஆகாஷே தான் தன் மிதிவண்டியை மறித்து தன்னைப் பார்த்து புன்னகை புரிகிறான் என்பதை உணர்ந்த மறுகணம் தன் வாயை புன்னகையால் அடைத்துக்கொண்டு ஆகாஷை நெஞ்சோடு அனைத்துக்கொண்டான்.
நீண்ட நட்களுக்கு பிறகு சந்திக்கும் நண்பனைக் கண்டதும் உதையமாகும் களிப்புக்குத்தான் அனை போட முடியுமா என்ன? சுனாமியை போல பன்மடங்கு ஆற்றல் அதிகம் கொண்ட நினைவலைகளால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வார்கள். கடவுளை பார்த்தால் கூட அவ்வளவு ஆனந்தம் ஏற்படுமா என்பது சந்தேகம் தான். இருவரும் பொடி நடையாக நடக்கத் தொடங்கினர். சில காலம் கழித்து சந்தித்த அவ்விரு இளைஞர்களுக்கிடையே பேச சிக்கிக்கொள்ளாத வார்த்தைகளே இல்லை. தனக்குத் தெரிந்த வார்த்தைகள் அனைத்தையும் உபயோகித்துத் தான் அனுபவித்த சம்பவங்களை மூளையின் முற்றத்தில் கடுகளவேனும் ஒட்டிக்கொள்ள இடங்கொக்காமல் வளித்து வடித்துக் கொட்டினர். இடையிடையே சிரித்து பல யுகங்கள் ஆனது போல என்று பலர் வியக்கும் வண்ணம் குபீரென்றும் எலிகத்தும் ஓசையிலும் வயிறுலிருந்து குடல் குலுங்கிக் குலுங்கிக் வெளியேறுமாறு சிரித்தனர்.
            சில்லறைப் போல் சிதறும் சிரிப்புடன் வெகு  நேரம் பேசிக் கொண்டே நடந்து வந்த தோழர்கள் ஓர் சிறிய பெட்டிக்கடையடைத்தனர். பாரம்பரியமாக பின்தொடரும் சம்பிரதாயம் போல் சில ஆண்கள் கடைக்கு முன் பெஞ்சில் அமர்ந்து டீயுடனும் பீடியுடனும் செய்தித்தாளையும் ருசித்துக்கொண்டிருந்தனர். இருவரும் டீ வாங்கிக்கொண்டு பெஞ்சில் அமர்ந்தனர் .”ஜல்லிக்கட்டுக்கு இவ்வருடமும் தடைவிதிக்கப்படுமா?” என்று எதிரில் அமர்ந்திருந்த ஆண்களில் ஒருவர் செய்தித் தாளைப் பார்த்துக் கொண்டே உரக்கக்கூவினார்.
            அவ்வாறு அவர் கூவியதும் டீயை ஊதிக்கொண்டிருந்த ஆகாஷ், “ எதுக்கு டா இந்த ஜல்லிக்கட்டெல்லாம்”, என்றான்.
            “அது ஜல்லிக்கட்டு இல்ல  மச்சி ,அதோட உண்மையான பேரு ஏறுதழுவுதல். ‘ஏறு’ன்னா காளை, அத  கட்டித்தழுவுறது ஏறுதழுவுதல். காளையோட கொம்புல சல்லிக்காசு கட்டி வெச்சிருப்பாங்க எறுத கட்டித் தழுவுற வீரனுக்கு அந்த சல்லி, அதைத்தான் நம்ம ஜல்லிக்கட்டுன்னு சொல்றோம்” என்று விளக்கினான் இலக்கியன்.
            “வாயில்லா ஜீவன் இப்படி அவங்க வீர சாகசத்தக் காட்ட கொடுமப்படுத்தறது தப்பு”.
            “என்ன தப்பு? கேரளாவுல யானையும், ஐதரபாத்ல குதிரையும் , ராஜஸ்தான்ல ஒட்டகத்தையும்,துன்புருத்துராங்கன்னு சொல்லிட முடியுமா? ஏன், மிலிட்டரில குதிரை மேல ஏறி சண்டைபோடலையா, கடும் பயிற்சி இல்லாம அதுங்க தாக்கு பிடிக்குமா? போலீஸ் மோப்ப நாயா கொடுமபடுத்தறோம்னு ஏன் போராட்டம் பண்ணல? இதுங்களோட சாணத்துல  உரம் இல்ல, பால்ல பணம் இல்ல.”
"நா பீட்டால உறுப்பினரா இருக்கேன். நம் நாட்டுமாடுங்க கஷ்டப்படக்கூடாதுனு அமெரிக்க நாட்டு அமைப்பு வலியுறுத்துது. நமக்கு எங்க போச்சு புத்தி?".
அதுவரை சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த இலக்கியனின் புருவங்கள் நெரிந்து ஒன்றோடொன்று இணைத்தன.  தன் அன்பு சிநேகிதனை கடிந்துகொள்ளவும் தனக்கு உரிமையுள்ளது என்று நினைத்துக்கொண்டான். "என்னடா பெரிய பீட்டா? மாடு நம்ம குடும்பத்துல ஒன்னு. நமக்கும் மாட்டுக்கும் நடுவுல அவன் யாருடா அமெரிக்கா புதுசா மொளச்சவன். நம்ம மாட்டுமேல நமக்கில்லாத அக்கறை அவனுக்கெதுக்கு? இதுல இருக்கற நுட்பத்தை நாம கூர்ந்து கவனிக்கணும். உலகத்துல வேற எந்த நாட்லயும் நம்ம மாட்ட மாதிரி நாட்டுமாடு இல்ல. நல்ல யோசி, பால்ல மட்டும்  தான் நாம வெளிநாட்டு பொருளை வாங்கல. நம்ம ஊர்ல நம்ம சாப்பிட மிச்சத்த சாப்டுட்டு விசுவாசமா நாட்டுநாயிங்க சுத்திட்டு இருந்துச்சு. அத ஒழிச்சு ஜெர்மன்ஷெப்பர்ட், டாபர்மேன், பொமரேனியன்னு கொண்டுவந்தானுங்க. அந்த நாட்டு நாயிங்க சாப்பட்றது வெளிநாட்டு உணவுங்கற business இருக்கு. கடைசியில நம்ம நாய தெருநாயாகிட்டானுங்க. இதே மாதிரி பசுமைப்புரட்சிங்க பேர்ல பண்டைய விவசாய முறைகளை ஒழிச்சு வெளிநாட்டு டிராக்டர், பெர்டிலிஸிர் கொண்டுவந்து நாசமாக்கினானுங்க. வேப்பங்குச்சி கருவேலங்குச்சி உப்பு போட்டு பல்லு வெளக்கிட்டிருந்த நம்மக்கிட்டருந்து அதயெல்லாம் புடிங்கிட்டு டூத்பேஸ்ட் குடுப்பானுங்க, கொஞ்ச நாள் கழிச்சு 'உங்க டூத்பேஸ்ட்-ல உப்பும் வேம்பும் இருக்கானு நம்பகிட்டயே கேப்பான். மானங்கெட்டவனுங்க. வளர்ந்த தேசமா இருந்த நம்ம இந்தியாவ வளரும் தேசமா மாத்தி லாபம் சம்பாதிப்பவன். அப்பேற்பட்ட அமெரிக்கானுக்கென்ன நம்ம குலதெய்வமான மாட்டுமேல அக்கறை?".
          மேலும் ஆகாஷ் யோசிக்கும்போது, "பிங்க் ரெவொலுஷங்கர பேர்ல இந்தியமாடுகளை அளிக்க முடிவு செய்த்துள்ளதுள்ளன வெளிநாடுகள். 1970ல இந்தியாவில் உள்ள நாட்டு மாடுகளின் எண்ணிக்கை ஏழுகோடி. இப்போ வெறும் ஏழாயிரம். காரணம், வெளிநாட்டான் கொண்டுவந்த ஜெர்சி மாடு. அம்மாட்டின் சாணமோ உரமாவதில்லை, கறியோ உணவாவதில்லை,பாலோ இந்தியாவில் சர்க்கரை நோய், இளமைபூப்பு, செரிமானமின்மை போன்ற நோய்களை பரப்புகின்றன. நோய்கள் நமக்கு, அவற்றின் மருந்து 36000 கோடி பெருவர்த்தகத்தின் லாபம் வெளிநாட்டானுக்கு. மேலும் உலகில் மாட்டுக்கறி உண்ணாத நாடே கிடையாது. அவர்கள் சாப்பிட நம் மாடுகள் வருடத்திற்கு 24 லட்சம் டன் வியாபாரமாகிறது. அது அநியாயமில்ல? மிச்சமுள்ள மாடுகள் இருக்கக்காரணம் காளைகள். அவையும் ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படுபவை. அவற்றை அழித்தல் செயற்கை கருத்தரிப்பு செய்ய நேரிடும். அதற்கும் நாம் அவனிடம் கையேந்த வேண்டும்", என்றான்.
           "நீ சொல்றது சரியாவே இருந்தாலும் குலதெய்வமா வாங்கற மாட்ட வெச்சு குரூர விளையாட்டு விளையாடுவது காட்டுமிராண்டித்தனம், படிப்பறிவற்ற்றவர்களின் விளையாட்டு".
         "சகமனுஷன கொலைவெறியோட தாக்கறதும் அத சுத்திஉக்காந்து லட்சம் பேர் கைதட்டறாங்களே, அதான் 'பாக்ஸிங்', அது வீரவிளையாட்டு, தமிழன் காலகாலமா ஏறுதழுவுனா அது கொடூரமா? தொலைச்சிருவேன்!", என்று உறுமினான் இலக்கியன். மேலும், " ஏறு தழுவுதல் னா மாட்ட கொன்னு அடக்குறதில்ல. சில தூரம் மாட்டோட ஆவேசத்தை அடக்குவது. அதுல ஜெயித்த காளை நல்ல ஆரோக்கியமான பால் தரும் மாட்டை கறுவிக்கும் ஆற்றல் பெரும். மேலும் பலம் பெரும். தோல்வி பெற்ற மாட்ட விவசாயத்துக்கு பயன்படுத்துவாங்க. உலகத்துல வேற எந்த நாட்லயும் மாட்ட மதிக்காதப்பவே மாட்டுக்கு பொங்கல் வெச்சு தொழுதவங்க நாம்ம. சிவனுக்கு வானளவுல கோயில் கட்டின அருள்மொழிசோழன் சிவனுக்கு முன்னாடி நந்தியை வணங்கும்படி வெச்சான். யாரப்பாத்து படிப்பறிவற்றவங்கற? உலகுக்கே படிப்பறிவு, பண்பாடு, வேளாண்மை, அறிவியல், நாகரிகம் சொல்லிகுடுத்தவங்க நாம. நேத்து பேஞ்ச மழைல மொளச்ச அமெரிக்கன் தன் மொழி தெரியாதவன் அநாகரீகமானவன்பான், நாம 'யாதும் ஊரே யாவருங்களீர்'னு இருந்தது தப்பாபோச்சுல்ல. தமிழ் மரபை விடுறதும் மானத்தை விடுவதும் ஒண்ணுனு சொல்லி 'தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா!' டேய்", என்று வீரவசனம் பொழிந்தான்.

          இவற்றைக்கேட்டு பிரமித்து நின்ற ஆகாஷ், "தமிழன்டா!" என்று தன் நெஞ்சிலிருந்து உறுமியபோது ஒளிர்ந்த அவன் கண்கள் தெளிவை வெளிப்படுத்தின.

GUYS! PLEASE DO SUPPORT YERU THAZHUVUDAL. IT'S NOT ONLY OUR PRIDE BUT ALSO OUR DUTY TO CONSERVE OUR TRADITION & NATION.



#Jaye

Jan 11, 2017

Hiking with friends in cycle is one of the most funs to associate with nature.

IDIOSYNCRASY


IDIOSYNCRASY

Peeping through the magnificent casement of the royal sweet shop, the poverty-stricken kid, Athoo had never seen his eyes brimmed with daze. There was a surprised silence. The wide gape of his lips prolonged until interrupted by the screech of the dog.
Athoo gawped at the superior attires of the people goofing around there. He looked awkwardly at his tattered shirt, shabby pair of trousers and naked feet. He symbolized himself with the dog, as both had no paternal care, no good apparels, and neither food at appropriate time.
He had a great craving for ‘halwa’, which is one of the India’s most appetizing sweet confections and expensive as well for an orphan kid under below-poverty line could afford. Ignorant of coarse-treatment waiting inside, Athoo sneaked into the sweet shop with a knack. He got amazed by the flamboyant lights. His eyes wandered around the shop. His little frenzy eyes were insufficient to gaze at the entire shop.  His bare feet sensed chillness when they met the floor of the air-conditioned shop.
On seeing the ‘halwa’ box, a wistful smile leaked off his lips. His longing hands touched the glass cage with ecstasy in eyes. “Hey... dirty boy… What’re you doing here? What do you want, huh?” the supervisor yelled in a stern voice. Yet, his eyes were glued to the royally packed ’halwa’ box. The exalted fingers of the little boy pointed towards the ‘halwa’ box. “That costs rs.351. You have it?” Athoo nodded. “Then why do you come here? You’re just messing the atmosphere. Go come with money. Boys! Swab up the glass”, the supervisor pointed to the glass, which was finger printed by Athoo.
His chillness muffled feet were warmed by the sun, when he was evicted from the shop.  He stepped out of the shop musing on his experience at the sweet shop. Athoo wended his way along the road with his dog, sweeping over a tiny stone. The stone came to his standstill under the foot of Dhanya, Athoo’s dumb neighbor and an affable pal. She moved her hands up and down in the air, the language that Athoo could translate. She yelled at him first and asked him to come soon.  Both set of their way to their area. The girl’s two long plaits followed her leaping unsteadily in the air and Athoo did follow her plaits. 
Dhanya’s mother, who looked after Athoo, was waiting for them to arrive. As he came, she dressed up Athoo with pretty good attire they had and made him look tidy. A wealthy couple who suffered without children was going to adopt Athoo. As Dhanya’s mother was financially very backward, she could not look after Athoo along with her own daughter Dhanya. 
Little children did not know about these things and they relished their sport-mood. On auditory perception of the car horn into their slum, all the children of that slum crowded around the car, jostling each other. The couple, whose store rooms were much larger than Dhanya’s home, entered Dhanya’s house. Athoo was running inside Dhanya’s home being chased by Dhanya. As he saw the rich couple,” Aunt! Someone has come home”, he cried and went inside. The rich couple was treated with fresh water, the only thing the poor woman could serve. 
Later, Athoo was heckled in the midst of his earnest ‘hide & seek’ game, to meet the couple.  He carelessly came into the scene. “What’s your name?” the rich lady asked him in a juvenile slang, putting a wide smile on her face.  He just looked at Dhanya’s mother. “Tell them your name”, she insisted. “Athoo”, he said without much interest and moved his attention towards mischievous Dhanya. “So sweet!” admired the rich lady. Athoo continued his naughty and playful facial expressions to Dhanya, behaving as if there were nobody else in the room other than Dhanya and Athoo.
The adults swapped some conversations with them. And finally, the lady asked Athoo, “Athoo, you wanna come with us?”
 He nodded without thinking. He gradually lagged back and hid himself behind his aunt, his fingers gripping the edge of her saree.   
“Why baby? We shall buy you anything you like. Come with us, darling.”The lady offered.
“Anything?” he asked curiously peeping with one of his eyes from behind aunt’s saree.
“Yeah, everything”
His idiosyncratic question tickled her heart giving out a chuckle through her lips “Halwa?!”
Of course, honey”
The couple entered the car with Athoo.


#Jaye